Thursday, February 10, 2005

தே(ன்)நீர் துளிகள்

தே(ன்)நீர் துளிகள்

heart-spill

என் திடமான தவம்
சீர் கலைந்து
உன்னையறியாமல் உன்னுள்
கரைந்தும் விட்டது
உன் வருகையால்

-------------------------------

கட்டுப்பாடுகளை உதறிவிட்டு
உன் கைச் சேர்த்தேன்
இனி நம் காதல் வாழ்வு
இனிக்க

-------------------------------

இனவெறி கொண்ட
ஊர் சந்திக்காத
நம் சந்திப்புகளே
நம் காதலின்
இனிமையை இன்னும் கூட்டுகிறது
திகட்டாமல்

-------------------------------