Saturday, October 02, 2004

லாஸ்ட் பெஞ்ச்




உலகம் காண முடியா உலகம்
மனித துர்நாற்றமில்லா சமூகம்
முகமூடியில்லா உயிர்கள்
காலன் நலிந்த இடம்
கவலைகளின் வடிகால்...
என் கனவு!


----------------------------------


சிந்தையில் உண்ர்ந்தேன்
இன்று...
வள்ர்ச்சிக் குன்றிய நானும்
"டிஃப்ரென்ட்லி ஏபிள்ட்"


----------------------------------


அருமை பெற்றோர்
இனிமை காதலி
"கார்டூன் மதன்" நினைப்போடு அந்தரத்தில் நான்
"இன்னும் கொஞ்சம் மாற்று"....நட்பன்.


----------------------------------


விடியலில் இருந்து இவ்வட்டை என் பிடியில்
புலன்கள் மங்குகிறது பசியால்
சீக்கிரம் ஒலியுங்கள்
"கட்! கட்! ஷாட் ஓவர்"


----------------------------------


"டயர்"களுடன் கூடியிருப்பார்கள்
தெருமுனையில்...
திருப்பித்து விடுவோம் காகிதத்தை
"அக்கா வரவில்லை"யென்று!!!


----------------------------------

No comments: